தென் தமிழக மாவட்ட மக்களுக்கு இதமான செய்தி; இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு!
கடந்த மாதம் பொங்கல் தினத்தை ஒட்டி தமிழகத்தை விட்டு வடகிழக்கு பருவமழை காலம் முற்றிலுமாக விலகியது. இதனால் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஆங்காங்கே தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டு தான் வருகிறது. அதுவும் குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதுவும் குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று லேசான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன் படி தென்தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
