தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

வெப்பமண்டல சூறாவளியின் கீழ் அடுக்குகள் காரணமாக, கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று தென்னிந்தியாவை சந்திக்கும், இதனால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கீழ்கண்ட தேதிகளில் இடி, மின்னல் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 21: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்

ஏப்ரல் 22: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 23 மற்றும் 24: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

ஏப்ரல் 25: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 22 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை:தமிழக சட்டசபையில் மசோதா !

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.