தமிழகத்தில் இன்றும் நாளையும் குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுவும் அந்த 11 மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் மே 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதன்படி மே 10ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.