இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!
நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த வெளியில் மத்தியிலும் கூட தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மிதமான முதல் கனமழை பெய்து கொண்டு வருகிறது.
இதனால் அங்குள்ள மக்கள் இதமான நிலையை உணர்கின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இருப்பினும் மழை பற்றி எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
