தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

தற்போது கோடை காலம் ஆனது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். எந்த வருடமும் இல்லாத கோடைகாலம் மூன்று இந்த வருடம் இருந்தது. காரணம் எனில் இந்த கோடை காலத்தில் சற்று வெப்பத்தின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. ஆனால் பல பகுதிகளில் இந்த கோடையின் வெப்பத்தில் தாக்கமானது அதிகமாகவே காணப்பட்டது. மேலும் ஒரு சில பகுதிகளில் கன மழையும் மிதமான மழை மற்றும் லேசான மழை பெய்தது இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால் குடிநீர் பற்றாக்குறை இந்த கோடை காலத்தில் நிகழவில்லை என்றே கூறலாம்.e96d050939d43131d755286821f5f75c-1

 தற்போது மேலும் ஒரு இன்பமான தகவலை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் ஜூலை 3ஆம் தேதி  வரையுள்ள அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இன்று தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் நாளை நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதை தொடர்ந்து கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment