வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு! நாளை முதல் வறண்ட வானிலை!!

2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையை தமிழக மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள். ஏனென்றால் 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அதிகமாக காணப்பட்டது. அதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கியதுடன் மெல்ல மெல்ல மழையின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆயினும் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது.

குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களில் சில தினங்களாக லேசான மழை பெய்தது. இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களுக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை முதல் 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment