Connect with us

இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

மழை

தமிழகம்

இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

பிப்ரவரி மாதம் ஆரம்பித்தாலே தமிழகத்தில் குளிர் காலம் மெல்ல மெல்ல முடிவுக்கு வரும். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படியே தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இருப்பினும் ஆங்காங்கே லேசான மழை பெய்து கொண்டு வருகிறது. இன்று தமிழகத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top