கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

நேற்றைய தினம் நம் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்தது. அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

அதோடு மட்டுமில்லாமல் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளைய தினம் தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அதன் பின்னர் கனமழை குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment