Connect with us

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

rain

தமிழகம்

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறியுள்ளது.

அதே போல் ஆகஸ்ட் 12,13-ம் தேதிகளில் வட மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், தென் மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும். கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறியுள்ளது.

மேலும் கேரளா, லட்சத்தீவு தென் கிழக்கு அரபிக்கடல், ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top