மழை காலத்தை விட கோடை காலம் சூப்பர் போல….!! இந்த ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு?
இன்றைய தினம் காலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கோடைகாலத்தில் இதமான செய்தி ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதுவும் குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் ஒரு 12 மாவட்டங்களுக்கு மட்டும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இவ்வாறு உள்ள நிலையில் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மத்திய தமிழக மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏப்ரல் 11 ஆம் தேதியில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
