
Tamil Nadu
மக்களே அலர்ட்..! அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிகரித்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அதே போல் தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவள்ளூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என கூறியுள்ளது.
