தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு !!வானிலை மையம் தகவல்..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கும வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை, நாளைமறுநாள் தென் தமிழகம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தென் தமிழக, கேரள கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.
