கொஞ்ச நேரத்தில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் விழப்போகுது மழை!!!

தமிழகத்தில் நேற்றைய தினத்தோடு வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை முற்றிலும் இந்தியாவை விட்டே நகந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கனமழை

இன்றைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் ஓரிரு மணி நேரத்தில்  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அரியலூர், கடலூர், திருவாரூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment