Connect with us

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

659dece7ae9969a6be2e12b63cb70a52

தற்போது நம் தமிழகத்தில் உள்ள சூழ்நிலையானது மக்களுக்கு ஓரளவு எரிச்சலை தரவில்லை என்றே கூறலாம். ஏனென்றால் தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் முடிந்துவிட்டது மேலும் நாம் மிகுந்த குளிர் சூழ்நிலையை உணர்கின்றோம். மேலும் தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கிவிட்டது. இதன் விளைவாக தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.608543c4b261285ef26e7c0abd01d81c

அதன் வரிசையில் தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெய்யக்கூடும் என்றும் கூறுகிறது.மேலும் ராணிப்பேட்டை திருவள்ளூர் காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் நீலகிரி கோவை தேனி ஈரோடு நாமக்கல் சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 14ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அவை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top