இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.கனமழை

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  நாளை கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வரும் 31ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியது. தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவானது.

அவிநாசி, கயத்தாறு, பரமக்குடி, தென்காசி மற்றும் பந்தலூரில் தலா ஆறு சென்டி மீட்டர் மழை பதிவானது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment