முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!
நேற்றைய தினம் தமிழகத்தில் எதிர்பாராதவிதமாக அதி கனமழை பெய்தது. இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்தது. அதோடு மட்டுமில்லாமல் இன்று ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழக மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பிப்ரவரி 13ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
