4 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் மத்தியில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.கனமழை

தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் இன்று  4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

விருதுநகர், மதுரை, சிவகங்கை,புதுக்கோட்டை, திருச்சி, கடலூர், திருநெல்வேலி, குமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்  கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment