4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

d60cccbdbc56c903c701cb596bfabf75

தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன என்பதும் என்பதும் அணைகளில் வேகமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

ஏற்கனவே கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் அதே பகுதியில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment