தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மக்களே உஷார்!! வருகின்ற 8-ம் தேதி மிக கனமழை பெய்யும்.. வானிலை அப்டேட்!!
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ரெடியா இருங்க!! டிச.7-ம் தேதி 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!!
சென்னை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.