மக்களே உஷார்!! இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!!

கடந்த சில நாட்களாவே நம் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கேரளாவில் பயங்கரம்!! தலையை துண்டித்து 2 பெண்கள் நரபலி.!!!

அதே போல் விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரபல தனியார் மருத்துமனைக்கு 3.10 லட்சம் அபராதம்: பின்னணி என்ன?

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment