10 மாவட்டங்களில பட்டையக் கிளப்ப காத்திருக்கும் கனமழை!நாளைக்கு வரைக்க தொடரும்!!

தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீரானது சாலையோரங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்றைய தினம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கனமழை நாளையும் தொடரும் என்றும் கூறியது. 25ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் ஒன்பது சென்டி மீட்டர் மழையும், சாத்தனூரில் ஆறு சென்டி மீட்டர் மழையும் அன்னூரில் ஐந்து சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment