கவனமா இருங்க!! தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி காரணமா நீலகிரி, கடலூர், திருவண்ணாமலை, கோவை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணி பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மாணவர்களே உஷார்!! விடுமுறை நாட்களில் இங்கு செல்ல கூடாது..!!

அதே போல் நாளைய தினத்தில் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு விவகாரம்… உத்தரவாதம் அளித்த இபிஎஸ்..!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment