தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கை பகுதிகளில் நிலவக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை குமரி கடம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையை நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவிழக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை!!
இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே போல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வருகின்ற 29-ம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
திமுகவில் பரபரப்பு! கூட்டுறவுத் துறை செயலாளர் சென்ற கார் விபத்து.!
தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.