Connect with us

வாட்டிவதைக்கும் குளிரில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!: இந்திய வானிலை ஆய்வு மையம்

snow and rain

News

வாட்டிவதைக்கும் குளிரில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!: இந்திய வானிலை ஆய்வு மையம்

வாட்டிவதைக்கும் குளிரில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!: இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய உடன் தமிழகம் ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டது. ஆயினும் அவ்வப்போது மழை பெய்து தான் வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இவ்வாறுள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடமாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் பனியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் லடாக்கில் கடும் பனியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதே வேளையில் ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top