இன்றும் நாளையும் உறைபனிக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்!!

பொதுவாக நம் தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில் பற்றி தான் அதிக அளவு பேசப்படும். அந்த அளவிற்கு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். ஆனால் அதைவிட நட்பாண்டின் குளிர் காலத்தில் பனிமூட்டமானது மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்பது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் பனி பெய்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இந்த குளிர்காலத்தில் விரைவாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வட மாநில ரயில் போக்குவரத்து சேவையில் ரயில் இயக்குவதற்கு சற்று தாமதம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த நாள் சில தினங்களாக சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது என்று கூறிக்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் இந்த இரண்டு மாவட்டங்களின் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மக்கள் அதிகாலையில் வெளியே செல்வதும் சற்று தவிர்க்க வேண்டிய சூழ்நிலையாக மாறி உள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வேளையில் லேசான பனிமூட்டமானது காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.