பலத்த சூறாவளி வீச வாய்ப்பு: 3 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

மீனவர்

மழைக்காலம் என்றாலே அதிகமாக பாதிக்கப்படுவது மீனவர்கள்தான். மழை காலத்தில் அவர்களால் கடலுக்கு செல்ல முடியாத அளவிற்கு கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அதன்படி நவம்பர் 9ஆம் தேதி, நவம்பர் 10ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதியில் வங்ககடலில் தெற்கு ஆந்திர, தமிழக, இலங்கை கரையோர மற்றும் குமரி கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 10,11 ஆம் தேதி வங்கக் கடலின் தென் பகுதி, மத்திய பகுதியில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இவை மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அரபிக் கடலின் தென் கிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print