
Tamil Nadu
விடாது விரட்டும் மழை..!! அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!!
கோடையின் வெயிலை தணிக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடைமழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதுவும் வட தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த மழையானது வங்கக் கடலில் உருவான புயலின் காரணமாக ஏற்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் கோடையில் இதமான வானிலையே உணர்வதாகவும் காணப்படுகின்றனர்.
