முதல்வரின் உத்தரவை நிறைவேற்றிய கவுன்சிலர்; பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா!
நேற்றைய தினம் தமிழகத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலானது பலருக்கும் ஆச்சரியப்படத்தக்கதாக இருந்தது. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவின் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிட்டு அந்த தலைவர் பதவிகளை கைப்பற்றினர். இதனால் கூட்டணி கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பல பகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஏனென்றால் ராஜினாமா செய்யாவிட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சித் தலைவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து திமுகவின் கல்பனா தேவி வெற்றிபெற்றிருந்தார். கூட்டணிக்கு எதிராக வென்றவர்கள் பதவி விலக வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் கல்பனா தவிர ராஜினாமா செய்துள்ளார்.
