வலிமை படத்திற்கு தணிக்கைக்குழு அளித்த சான்றிதழ்…. வெளியான தகவல்…!

ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் தான். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் என்பதாலும், இயக்குனர் வினோத் என்பதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

ஏற்ற படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் போன்றவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. வலிமை படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் சுமார் 15 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

வலிமை

படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வலிமை படத்திற்கு தணிக்கைக் குழுவிலிருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாம். மேலும் அந்த சான்றிதழில் வெளியீட்டு தேதி ஜனவரி 13 எனவும் ஆக்‌ஷன் படம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல தமிழகம் முழுக்க 700 முதல் 750 தியேட்டர்களில் வலிமை படம் வெளியாக உள்ளதாம். சுமார் 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 செகெண்ட் என கிட்டத்தட்ட 3 மணிநேரப் படமாக உருவாகியுள்ள வலிமை படத்தை சென்சார் செய்தபிறகே அஜித்தும் தயாரிப்பாளரும் பார்ப்பார்கள் என முன்னதாக இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தற்போது படம் சென்சார் முடிந்து சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் அஜித்தும் போனி கபூரும் படத்தை பார்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோ படம் வெளியாகும் அன்றைய தினம் அஜித் ரசிகர்களால் ஒரு திருவிழா போல அனைத்து திரையரங்குகளும் ஜொலிப்பது மட்டும் உறுதி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment