Connect with us

கல்வி தொலைக்காட்சிக்கு CEO பதவி.!!: பள்ளிக் கல்வித்துறை முடிவு;

kalvi channels

தமிழகம்

கல்வி தொலைக்காட்சிக்கு CEO பதவி.!!: பள்ளிக் கல்வித்துறை முடிவு;

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் இல்லாமல் சிரமப்பட்டனர். அதனை போக்கும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் கல்வி தொலைக்காட்சி.

இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பாடங்களை கற்றுக் கொண்டனர். இந்த நிலையில் இந்த கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டம் ஒன்றினை உருவாக்கி உள்ளதாக தெரிகிறது.

அதன்படி கல்வி தொலைக்காட்சிக்கு இனி சிஇஓ பதவி உருவாக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. 5 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.

மேலும் இந்த பதிவுக்கு என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் கல்வி தொலைக்காட்சியின் தரம் குறையாது என்றும் அதன் தரம் மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top