மத்திய பல்கலைக்கழக சேர்க்கை: நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே!! 12-ம் வகுப்பு மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படாது!
தற்போது அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு முன்னதாக நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்பட்டு வருகிறது. இவை மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நடத்தபடுகிறது.
இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கு சில முக்கிய அறிவிப்பு கிடைத்துள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்க சேர்க்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை கொண்டுதான் இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண், வெயிட்டேஜ் முறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது என்றும் யுஜிசி கூறியது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்கும் என்று யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
