
செய்திகள்
தொடர்ந்து பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்! எஃகு துறை அமைச்சர் ராஜினாமா!!
இன்றைய தினம் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி கொண்டு வருகிறது. ஏனென்றால் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியினை ராஜினாமா செய்து கொண்டு வருகின்றனர்.
ஏனெனில் அவர்களின் பதவி காலம் நாளைய தினத்தோடு நிறைவு பெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்த முக்தர் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் அவர் வர இருக்கின்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்தார்.
இவரைத் தொடர்ந்து மற்றும் ஒரு மத்திய அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மத்திய எஃகு துறை அமைச்சர் ஆர்சிபி சிங்க் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஆர்.சி.பி சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நாளைய தினத்துடன் முடிவடையும் நிலையில் இன்றைய தினம் பதவி விலகினார்.
