தேசிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டு இயந்திர கதியில் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மாநில அமைச்சர்களுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை நடத்துகிறது.
ஆலோசனைக்கு பிறகு லாக் டவுன் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அது குறித்த தளர்வுகளும் ஆலோசனையில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
சற்றுமுன் பிரதமர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
நாளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.