மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கே கொரோனா தொற்று உறுதியானது மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதி

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருப்பவர் பாரதி பிரவீன் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கொரோனா சம்பந்தபட்ட பணிகளுக்கு அலைந்தாலும் பலரை சந்தித்தாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் திடீரென  கொரோனா பரிசோதனை இவருக்கு மேற்கொள்ளப்பட்டது அதில் கொரோனா தொற்று உறுதியானது

அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா, பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு கொரோனா என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment