சிலிண்டர் வெடிப்பு! 5 நாட்களுக்கு முன்பே மத்திய உளவுத்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோவை கார் வெடிகுண்டு சம்மந்தமாக மத்திய உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் தலை மாயம் – பின்னணி என்ன?

அதன் படி, அக்டோபர் 18-ம் தேதியில் உளவுத்துறை தமிழக அரசை எச்சரித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

மேலும், கடந்த 2019- ஆண்டு வரையில் முபினை கண்காணித்து வந்ததாகவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முபினை கண்காணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment