Connect with us

மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை! என்ன காரணம்?

News

மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை! என்ன காரணம்?

3094ee4991eebbd540c3572b6a66fe28

கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய மக்கள் பெரும் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் தற்போது அடுத்ததாக டெல்டா பிளஸ் என்ற வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

முதல்கட்டமாக இந்த வைரஸ் மகாராஷ்டிரா கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பரவி இருப்பதாகவும் இதுவரை இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 40 பேருக்கு டெல்டா பிளஸ் என்ற வைரஸ் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த மூன்று மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து டெல்டா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 

டெல்டா பிளஸ் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் கொரோனா வைரஸை விட மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களை கூட இந்த டெல்டா பிளஸ் வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top