ரேசன் கடைகளில் சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

ரேஷன் கடைகளில் சிலிண்டர் கேஸ் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்போது மத்திய அரசின் ஏஜென்சிகள் மூலம் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இனி மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோக செயலாளர் சுதான்ஷூ பாண்டே வர்கள் தெரிவித்துள்ளார்

இது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூறிய அவர், ‘ரேஷன் கடைகளில் 5 கிலோ எடை கொண்ட சிறிய வகை சிலிண்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும், இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வந்தால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment