18 வயதுக்கு குறைவானவர்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரனோ தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை அன்று சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

இதுவரை 5 வாரங்கள் மெகா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது தமிழக அரசின் சாதனையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அதாவது இரண்டு வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மருத்துவ கழகம் பரிந்துரை செய்துள்ளது

இரண்டு வயது முதல் 18 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தலாம் என மருத்துவ கழகம் பரிந்துரை செய்ததை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment