பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு

இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு இத்தொகை அவர்களது குடும்ப  வருமான உச்சவரம்பின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ 2.5 லட்சம் வரை இருக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதே போன்று  பட்டியல் இன மாணவர்களுக்கும் 2.5 வரை குடும்ப வருமானம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வருமான உச்சவரம்பு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ 44,500 இல் இருந்து ரூ 2.5லட்சமாகவும், பட்டியலின மாணவர்களுக்கு ரூ 2லட்சத்தில் இருந்து ரூ 2.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment