8 மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்!-தமிழக அரசு விளக்கம்;
வடக்கே ஜம்மு காஷ்மீர் தொடங்கி தெற்கே குமரி வரை பாலமாக அமைந்துள்ளது தேசிய நெடுஞ்சாலைகள். இந்த தேசிய நெடுஞ்சாலைகள் வாகன போக்குவரத்திற்கு மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாநிலத்துக்கு இடையே உள்ள உறவை பலப்படுத்தும் விதமாக காணப்படுகிறது.
இதனால் இந்திய அரசாங்கம் சாலைகள் குறித்தான திட்டங்களுக்கு மிகவும் நுணுக்கமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி திருவண்ணாமலை தொடங்கி கள்ளக்குறிச்சி உள்பட 8 மாநில நெடுஞ்சாலைகளில் தரம் உயர்த்த மத்திய அரசு கொள்கை ஒப்புதல் தந்துள்ளது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையாக முறைப்படி அறிவிக்கும் அறிவிப்பை இந்திய அரசிதழில் வெளியிடாமல் உள்ளது.
இதனால் 8 மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 8 சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 18ம் தேதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
ஒவ்வொரு கலந்தாய்வு கூட்டத்திலும் 8 சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
