Connect with us

மத்திய அரசே! அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறுக- தமிழக முதல்வர்..

stalin new16

தமிழகம்

மத்திய அரசே! அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறுக- தமிழக முதல்வர்..

நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. குறிப்பாக பல இடங்களில் ரயில்களில் தீ வைத்தல் போன்ற செயல்களில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று தமிழகத்திலும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னையில் அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தினால் தங்களுடைய ராணுவ கனவு வீணாகி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள முன்னாள் ராணுவத்தினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இளைஞர்களின் லட்சியத்தை சிதைக்கும் அக்னிப் அத்திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான்கு ஆண்டுகள் மட்டுமே இராணுவத்தில் பணிபுரிய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தமிழக முதல்வரும் இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top