பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழ்நாடு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க படாமல் இருப்பதால் தங்களுக்கு மத்திய மாநில அரசின் சலுகைகள் கிடைக்காமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர்.

தற்போது நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.

அதன் படி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி அளிப்பதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் , குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment