Connect with us

14 மாவட்டங்களில் சதமடித்த வெயில்! அதுவும் காஞ்சியில் கருணை இல்லாமல் காட்டியது அனல்..!!

dry weather 1

தமிழகம்

14 மாவட்டங்களில் சதமடித்த வெயில்! அதுவும் காஞ்சியில் கருணை இல்லாமல் காட்டியது அனல்..!!

பொதுவாக தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வந்தால்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் கடந்த வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்ததால் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்து உள்ளது.

அதிலும் அதிகமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 109.76 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. மேற்கு இருந்து வீசும் காற்றின் தாக்கத்தால் காஞ்சிபுரத்தில் வெப்பநிலை  அதிகரிக்கிறது.

நடப்பாண்டில் கோடை காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில் 105.98 டிகிரி பாரன்ஹீட், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி ராணிப்பேட்டையில் தல 105.44 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது,

விருதுநகர் மாவட்டத்தில் 104.52 டிகிரி, கடலூர் மாவட்டத்தில் 103.28 டிகிரி, அரியலூர், தர்மபுரியில் 102.92, மதுரையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருவண்ணாமலையில் 105.8 டிகிரி, சேலத்தில் 104 டிகிரி, புதுக்கோட்டையில் 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top