சிமெண்ட் விலை உயர்வு! ஈபிஎஸ் பேச்சு உண்மைக்குப் புறம்பானது:அமைச்சர் தங்கம் தென்னரசு;

இன்று காலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சிமெண்ட் விலையை குறித்தும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.தங்கம் தென்னரசு

அவர் கூறிய பட்டியல் கருத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கருத்து கூறியுள்ளார். அதன்படி சிமெண்ட் விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சிமெண்ட் விலையை மேலும் 20 ரூபாய் குறைக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சிமெண்ட் மூட்டை விலை தற்போது ரூபாய் 420 இல் இருந்து ரூபாய் 440 வரைக்கு விற்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் அமைச்சர் தங்கம்தென்னரசு.

டாம்சன் சிமெண்ட் மட்டும் 350 ரூபாயிலிருந்து 360 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தனியார் சிமெண்ட் விலையை ஒப்பிட்டு பார்க்கையில் rs.90 குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

குறைந்த விலையில் நிறைந்த தரம் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் விற்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment