Connect with us

செல்போன் ஒட்டுக்கேட்டது மத்திய அரசா? வெளிநாட்டு அமைப்பா? ப சிதம்பரம் கேள்வி

News

செல்போன் ஒட்டுக்கேட்டது மத்திய அரசா? வெளிநாட்டு அமைப்பா? ப சிதம்பரம் கேள்வி

1eac7f22308450f0f90f04223e3de5b0

செல்போன்களை ஒட்டு கேட்க மத்திய அரசு உத்தரவிடவில்லை என்றால் ஒட்டு கேட்டது யார் என்ற கேள்வி எழுகிறது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார் 

மத்திய அரசுக்கு தெரியாமல் யாருக்கும் கட்டுப்படாத அமைப்பு எதுவும் செல்போன் ஒட்டுக்கேட்பு ஈடுபட்டதா? என்ற கேள்வி எழுப்பியுள்ள ப சிதம்பரம் இந்திய அரசுக்கு தெரியாமல் வெளிநாட்டு அமைப்பு எதுவும் செல்போன்களை ஒட்டு கேட்டதா? என்றும் கூறியுள்ளார்

மேலும் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் தேசிய பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பி உள்ளதாக கூறிய ப சிதம்பரம் செல்போன் ஒட்டுக்கேட்பு நடந்ததா இல்லையா என்பது பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் செல்போன் ஒட்டுக்கேட்பு பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார் 

மேலும் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையை விட சிறந்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தான் சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பதவியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் பற்றி விசாரணை நடத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top