ஸ்ரீமதியின் செல்போன்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில் விசாரணை குறித்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கிடையில் வழக்கின் விசாரணை அமர்வு இன்று மீண்டும் வந்தது.

சென்னையில் மீன் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி!!

அப்போது கலவரத்தில் ஈடுப்பட்டதாக 234 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கும் படி ஏற்கனவே நீதிமன்றத்தில் உத்தரவிட்டும் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கக்கூடிய காலத்தில் செல்போன் ஒப்படைக்க அவசியம் இல்லை.. செல்போன் ஒப்படைப்பது குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று மாணவியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகை மீரா மிதுன் தலைமறைவு: லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு!

அப்போது பேசிய நீதிபதி மாணவியின் மரண விவகாரத்தில் செல்போன் உரையாடல் மிகவும் அவசியம் என தெரிவித்தார். மேலும், வழக்கின் விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment