படக்குழுவினர் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் பரிசு…. பிரபல இயக்குனர் அதிரடி அறிவிப்பு….!

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை படக்குழுவினர்கள் கொண்டாடுவது மட்டுமல்லாமல் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஏதேனும் பரிசு வழங்குவது வழக்கமான ஒன்று தான். இதுவரை தமிழ் சினிமாவில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படி ஒரு செயலை செய்தார்.

அதன்படி கடந்த தீபாவளி அன்று சிவா மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான அண்ணாத்த படம் வெளியாகி நல்ல வசூல் பெற்றது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குனர் சிவா உட்பட அனைவருக்கும் ரஜினிகாந்த் பரிசு வழங்கி வெற்றியை கொண்டாடினார்.

புஷ்பா

அதேபோல் தான் நற் ஒரு இயக்குனர் படக்குழுவினருக்கு பரிசு தொகை வழங்குவதாக அறிவித்து உள்ளார். அதன்படி பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

பான் இந்தியா படமான புஷ்பா தற்போது வரை அனைத்து மொழிகளில் சுமார் 275 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் 325 முதல் 350 கோடி ரூபாய் வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான வசூல் காரணமாக படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழுவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். லாபத்தை தாங்கள் மட்டும் வைத்து கொள்ளாமல் படக்குழுவினர்களுக்கும் வழங்கி மகிழ்வித்துள்ள செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment