பிரபல தமிழ் நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூடப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பிறகு ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்தார்
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார் என்பதும், திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து அவர் கிட்டத்தட்ட விலகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தெலுங்கில் நானி நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டுவிட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென மர்ம நபர்களால் முடக்கப்பட்டது இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை சில ஜோக்கர்கள் முடக்கி விட்டனர். எனவே சில நாட்கள் எனது கணக்கில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு எந்த பதிலும் அளிக்க வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்