ஒரு காலத்தில் உச்சக்கட்ட நட்சத்திரங்களாக இருந்த பிரபலங்கள் அரசியலுக்கு வந்து தற்போது நிலைமை இப்படி ஆகிவிட்டதா?
ஒவ்வொரு சினிமா துறையிலும் காலடி வைத்து நட்சத்திரங்களாக ஜொலிப்பதற்கு அவர்களின் கடின உழைப்பும், விடா முயற்சியும் தான் அவர்களுக்கு உதவும். அந்த வரிசையில் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் அரசியல் பாதைக்கு திரும்புவது அதிக அளவில் காணப்படுகிறது.
அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாவில் தாங்கள் ஒரு நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் போது திடீர் என்று யாரும் எதிர்பாராத வகையில் அரசியல் பாதைக்கு நுழைந்தனர்.அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் நடிகைகள் அரசியலுக்கு நுழைந்தது பற்றிய தொகுப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
இதில் முதலிடத்தை பிடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த். இவர் ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசனுக்கு போட்டி கொடுக்கும் அளவிற்கு ஏராளமான படங்களையும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருந்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் அவர் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றை தொடங்கினார்.
அதில் தான் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையை ஒரு கலக்கு கலக்கினார். இந்த நிலையில் அவரது கட்சி தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கேப்டனும் சற்று வலுவிழந்து உள்ளார் என்பது சில நாட்களுக்கு முன்பு வெளியான வீடியோவை பார்த்த அனைவருக்கும் தெரிந்தது.
இதில் இரண்டாவது இடத்தில் உள்ளார் உலகநாயகன் கமலஹாசன் எல்லாரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக உலகநாயகன் கமலஹாசன் திடீரென்று அரசியலுக்குள் குதித்து விட்டார்.
அதோடு மட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சியையும் அவர் உருவாக்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கினார். இதில் வேதனை என்னவென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். இந்த நிலையில் நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மூன்றாவதாக சுப்ரீம் சூப்பர் ஸ்டார் சரத்குமார். இவர் மிஸ்டர் சென்னை பட்டத்தினை பெற்றவர். அதோடு மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக தோன்றி அதன்பின்னர் சூரியவம்சம், ஐயா போன்ற பல படங்களில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக தோன்றி தமிழ் சினிமாவில் காலூன்றி வைத்தார்.
இவ்வாறு ஒரு நல்ல இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் போது பலரும் எதிர்பாராதவிதமாக சமத்துவ மக்கள் கட்சி என்பதனை தொடங்கி அரசியலுக்குள் திடீரென்று நுழைந்தார். இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்து கொண்டது மட்டுமில்லாமல் மக்களிடையே அரசியலிலும் கேப்டன் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தது.
இதில் நான்காவது நடிகை குஷ்பூ. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துக் கொண்டு வந்தார். ஒவ்வொரு ஹீரோயின்களுக்கும் ஒரு காலகட்டத்தில் மார்க்கெட் இழந்து விடும். அந்த நேரத்தில் சுதாரிப்பாக இருந்த நடிகை குஷ்பூ திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் தற்போது பாஜக கட்சியில் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் ஆனால் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்னதான் இவர்கள் எதிர்பாராதவிதமாக அரசியலுக்குள் நுழைந்தாலும் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது தான். சட்டமன்ற தேர்தலில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டியிடவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
