Connect with us

ஜெயிலர் கூட்டணியில் டாப் பிரபலங்கள்: லிஸ்ட் வேற லெவல்!!

Untitled design 2022 08 24T171333.469 16613415453x2 1

பொழுதுபோக்கு

ஜெயிலர் கூட்டணியில் டாப் பிரபலங்கள்: லிஸ்ட் வேற லெவல்!!

இளையதளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என கடந்த சில தினங்களுக்கு முன் பெயரிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

rajini jailer

இந்த சூழலில் ஜெயிலர் படத்தில் நடிகர்கள் விநாயகன், வசந்த் ரவி நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதோடு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு நடிப்பதாக ஏற்கனவே பட குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அதே போல் மலையாளத்தில் பிரபல நடிகரான விநாயகன் மற்றும் தரமணி, ராக்கி படத்தில் நடித்த வசந்த் ரவியும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top